அப்துல் கலாம் பொன் மொழிகள்(1931-2015)
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்...
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார். நீ அதை வென்று விடலாம்.
- கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு.
- அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும் பலமுள்ளவர்கள் ஆக மாற்றுகிறது.
- அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும் கடமை பற்றிய கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
- நான் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள் ளஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன
- கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும் சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
- அறிவியலுக்குபயம் தெரியாது.
- வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது
- கருணை இல்லாத அறிவியல் முழுமை பெறாது
- வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்
- வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்
- இமயத்தின் உச்சியை எட்டித் தொடும் தாயின் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவது ஆயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது back to top
- நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
- ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள் தான்.
- ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகின்றான்.
- ஒருபுத்திசாலிதன்னைபுத்திசாலிஎன்றுபெருமை கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகிறான்
- தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும் நிறுவனத்துக்கும் கட்சிக்கும் அப்பாற்பட்டது.
- தேர்வு முடிவுகள் வாழ்க்கையின் இறுதி முடிவுகள் அல்ல.
- உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நினைத்து விடாதே ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
- கொடுப்பது என்பது சிறந்த உயர்ந்த பண்பாகும் மன்னிக்கும் அன்புடன் இணையும் போதுதான் அது முழுமை அடைகிறது
- பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஆற்றல்கள். அவற்றை இழக்க வேண்டாம்
- இந்தஉலகத்தில்இந்தக் கண்கள் பார்க்க இழந்ததை திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஆகையால் மிகச் சிறந்தவற்றை செய்யுங்கள். back to top
- நாம் புன்னகை என்ற உடையை அணிய வேண்டும்.அதை பாதுகாக்க நம் ஆத்மா நல்ல குணங்கள் என்ற உடையை அணிய வேண்டும்
- எல்லா வகையான வலிகளைத் தீர்க்கவும் எல்லாவிதமான காயங்களை குணப்படுத்தவும், மிகச் சிறந்த மருத்துவர்கள் -காலம் பொறுமை மற்றும் இயற்கை.
- வெற்றி அடைய சிறந்த வழிகளாக எளிமையையும் கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
- பொறுப்புள்ள, எளிமையான, நேர்மையான கடின உழைப்பாளிகள் கடவுள் மதிக்கிறாள். ஏனெனில் அவர்கள் தான் உலகில் அவருடைய மிகச்சிறந்த படைப்பு என்று கடவுள் கருதுகிறார்
- முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என விமர்சிப்பர்.
- மழைவந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும் ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து மேகத்திற்கு மேலாக பறந்து மலையில் இருந்து தப்பிக்கும்
- கரைகளைக் கடக்கும் துணிவு இருந்தால் தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
- கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை. கனவு காண்பவர்கள் மட்டுமே தோற்கிறார்கள் back to top
- சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
- சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை
- பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர் கொள்ளத் துணியுங்கள்.
- நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய எரிய வேண்டும்.
- ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடை போடக் கூடும். (பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள்.) எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடு தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.
- அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள் அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
- ஒவ்வொரு இந்தியனும் கொள்ளும் உறைந்து கிடக்கும் அக்கினிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்
- நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய் உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
- கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது. back to top
- ஒவ்வொரு நொடியும் படைப்பதற்கான நொடியே அதை வீணாக்க வேண்டாம்.
- வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
- அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
- காலத்தின் மணல் பரப்பில் உன் கால் சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே.
- முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
- உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?
- மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
- உலகம் அழிந்துவிடும் முன், உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.
- வெற்றி என்பது உன் நிழல் போல நீ அதைத் தேடிப் போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும். back to top
- முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்கள் அவற்றை வெற்றிக்கொள்ள முடியும்.
- வெற்றியை சுவைக்க வேண்டும் என்றால் சிரமங்களை சந்திக்க தயங்கக் கூடாது.
- தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.
- வாழ்க்கை ஒரு கடினமான விளையாட்டு அதில் நீங்களும் ஒரு ஆள் என்பதை உணர்ந்தால் கட்டாயம் வெற்றி பெறலாம்.
- பேராற்றல் என்பது தொடர் நிகழ்வுகள்.அது விபத்து போன்று திடீரென ஏற்படுவதில்லை.
- வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை.இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்கள்கும் உழைப்பவர்களுக்கு மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
- ஊழல் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்றால் அது மூன்று பேரால் தான் முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
- உயரிய நோக்கம் இருந்தால் மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற சுவர்கள்தவிடு பொடியாகிவிடும். back to top
- வாழ்க்கையில் முன்னேற மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கக் கூடாது. தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும்.
- தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்ன புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.
- கடலில் பயணத்தை தொடங்கும் போது. கரைகள் மறைக்கிறதே என அச்சப்பட கூடாது.கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால் தான் பல கடல்களைக் உங்களால் கண்டுபிடிக்க முடியும்.
- உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன.தவழ முயற்சிக்காதீர்கள்.பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.
- எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.
- முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது

Post a Comment