Tha UGLY DUCK Tamil

 

அசிங்கமான வாத்து குஞ்சு!!

                           வாத்து ஒன்று தன் முட்டைகளை ஓர் ஆற்றின் ஓரமாக இட்டது அந்த ஆறு முட்டைகளும் ஒவ்வொன்றாக பொறிக்க துவங்கின. அவற்றில் 5லிருந்து அழகிய வாத்து குஞ்சுகள் வெளிப்பட்டு தாயோடு நீந்திச் சென்றன. கடைசியாக ஆறாவது முட்டை உடைந்து அதிலிருந்து அசிங்கமான ஒரு குஞ்சு வெளிப்பட்டது.”தத்தக்கா பித்தக்கா என்று அது தாயையும் அதன் குஞ்சுகளையும் பின்பற்றி சென்றது.

                                                குஞ்சுகள் திரும்பிப்பார்த்து முகத்தைச் சுளித்தன.பாதிகருப்பும் வெள்ளையுமாக சிலுப்பிக் கொண்டிருந்தது அசிங்கமான குஞ்சு.அவர்களின் முக பாவனையை கண்டு மனம் உடைந்தது. ஆகவே அவர்களோடு செல்வதை நிறுத்தியது. தள்ளப்பட்ட குஞ்சு தன் உருவத்தை தண்ணீரில் கண்டு தன்னையே வெறுத்தது. வாத்து நடை போட்டு கரையேறியது.அங்கே தானியம் பொறுக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் வாத்துக்குஞ்சு வந்ததும் பறந்து ஓடின.இயல்பு தானே! ஆனால் குஞ்சு நான் அசிங்கமாய் இருப்பதால் அதை பறந்து போய் விட்டன என எண்ணிக் கொண்டது.

                         குளிர் காலம் வந்தது பணியில் நடுங்கியது ஒரு குடியானவன் குஞ்சை வீட்டிற்கு கொண்டுசென்றான்குஞ்சு நினைத்தது யாரும் என்னை நேசிக்கவே முடியாது. நான் இங்கிருந்து தப்ப வேண்டும். தப்பித்து ஓட முயன்றபோது அது பால் பாத்திரத்தை தட்டிவிட்டு மாவு சட்டியை கவிழ்த்து விட்டது. ஒரு நாய் குரைத்தது ஒருபிள்ளை அதை பிடித்துக் கொண்டு வரும்படி துரத்தியது. ஆனால் அவர்கள் தன்னை வெறுத்ததால்தான் துரத்துகிறார்கள் என்று குஞ்சி எண்ணியது.

                   அசிங்கமான வாத்து குஞ்சு அதன் பிறகு ஒரு கோழியை சந்தித்தது ஐயோ என்னால் இவளைப் போல கொக்கரிக்க முடியவில்லையே நான் ஒன்றுக்கும் உதவாதவள் என்று நினைத்தது. ஒரு பூனையைப் பார்த்ததும் இந்த பூனையைப் போல் என்னால் சத்தம் பண்ண முடியவில்லையே நான் எதனை தான் சரியாக செய்கிறேன், என்றுநொந்து கொண்டது. இப்போது வசந்தகாலம் வளரத் துவங்கியது மலைப்பகுதி வண்ண வண்ணமாக மிளிரத் துவங்கியது.

               வானத்தில் ஏதோ வினோதமான சத்தம் கேட்கிறதே என்று குஞ்சி வானத்தை அண்ணாந்து பார்த்ததுஅது ஓர் அன்னப்பறவை கூட்டம் ஒன்று ,இரண்டு, மூன்று, நான்கு ,ஐந்து மொத்தம் ஆறு அவை வெண்ணை போல குஞ்சின் தலைக்கு மேல் பறந்து வந்து குளத்தில் இறங்கின.குஞ்சை கூப்பிடுவது போல இருந்தது அவைகளின் பார்வை, அது வாத்து நடை போட்டு குளத்தை அடைந்தது. அந்த அன்ன பறவைகளைப் பார்த்து பின்பு தன் நிழலை தண்ணீரில் பார்த்தது . 

                            அங்கே என்ன தெரிந்ததுஓர்அழகிய அன்ன பட்சிஅசிங்கமான குஞ்சி அழகிய வெண்ணிற அன்ன பட்சியாக வளர்ந்து இருந்தது.அதற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை அது நீந்தி நீந்தி அன்னங்களின் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.

                            நாம் யாவருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் நான் உதவாக்கரை என்று யோசிக்கத்தான் செய்கிறோம். யாரோ சொல்வதை வைத்து நம்மை கணக்குப் போடும் கெட்ட பழக்கத்திற்கு வருகிறோம் கடவுள் நம்மை வரைந்து கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.நமது அழகிய சிறகுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன .ஒருநாள் நாம் அசிங்க வாத்து குஞ்சுகளாயிராமல் அருமையான அன்னப்பறவைகளாவோம்...

Post a Comment

Previous Post Next Post