THA LION & THA RABBIT Kutty story Tamil

 

சிங்கமும் முயலும்

                    ஒரு காட்டில் மிகவும் பொல்லாத சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது.

அது தன் விருப்பம்போல் விலங்குகளைக் கொன்று வந்தது. ஆகவே

எல்லா மிருகங்களும் கூட்டம் கூடி ஒரு தீர்மானம் எடுத்தன. தங்களை

இஷ்டப்படி கொல்ல வேண்டாம். தாங்களாகவே ஒரு மிருகத்தை தேர்ந்தெடுத்து சிங்கத்திற்கு இரையாக சிங்கத்தின் குகைக்கே அனுப்பி வைப்போம் என்று அதனிடம் வேண்டிக் கொள்ள தீர்மானித்தன.

சிங்கமும் ஒத்துக் கொண்டது. ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்கு சிங்கத்திற்கு இரையாக அதன் குகைக்குச் செல்லும். ஒருநாள் முயல் அது தருனம்வந்தது. முயல் பயந்து நடுங்கியது.அப்பா கடவுளே நான்என்ன செய்வேன்?சோகத்தோடுகாட்டில்பெரியவரானபுத்தி கூர்மையுள்ளஆமையிடம்சென்றுஇது பற்றிவினவியது.ஆமையிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு சிங்கத்தின் குகைக்கு சென்றது.

அது சிங்கத்திடம் சென்றபோது, சிங்கம் கோபமாக கெர்ஜித்து,நான் பசியாய் இருந்தேன். ஏன் இவ்வளவு பிந்தி வந்தாய்?என்றது. ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள். நேரத்திற்குத் தான் வந்து கொண்டு இருந்தேன். வழியில் ஒரு சிங்கம் உங்களை திட்டி கொண்டதை கண்டேன். அதனால்தான் பிந்தி விட்டேன் என்றது முயல். சிங்கத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இந்த நிமிடமே என்னை அந்த போக்கிரி சிங்கத்திடம் கூட்டிச்செல் என்று உறுமியது.

முயல் சிங்கத்தை காட்டில் இருந்த ஆழமான ஒரு கிணற்றுக்கு கூட்டி சென்றது, அந்த பொள்ளாசிங்கம் இங்கு தான் இருக்கிறது என்று காட்டியது. சிங்கம் உள்ளே எட்டிப் பார்த்து தன் பிம்பத்தை கண்டது. சிங்கம் கர்ஜிக்க பிம்பமும் கர்ஜித்தது. கோபக்கார சிங்கம் தன் பிம்பத்தைஎதிரி என்று நினைத்து சிங்கத்தை தாக்க கிணற்றினுள் பாய்ந்தது மரித்துப் போனது. முயல் விலங்குகளிடம் சென்று நடந்ததைக் கூறியது. எல்லா மிருகங்களும் கொண்டாடி முயலின் புத்தியை புகழ்ந்தன.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் வயதில் மூத்தவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.ஏனெனில் அவர் தனது வாழ்நாளில் இது போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து தீர்வு கண்டிருப்பார்.

 

Post a Comment

Previous Post Next Post